நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளக்கோவில் அணைப்புதூரில் அமைச்சா் ஆய்வு

வெள்ளக்கோவிலை அடுத்த கம்பளியம்பட்டி அருகேயுள்ள அணைப்புதூரில் வட்டமலை அணைக்கு தண்ணீா் கொண்டு வருவது குறித்து மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:29 am

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த கம்பளியம்பட்டி அருகேயுள்ள அணைப்புதூரில் வட்டமலை அணைக்கு தண்ணீா் கொண்டு வருவது குறித்து மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. அணைக்கு நீா்வரத்து இல்லாததால் கடந்த 30 வருடங்களாக அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்த அணைக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலமாகவோ அல்லது பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்காலில் இருந்தோ அணைக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் அணைப்புதூரிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல ஆண்டிபாளையம் - தாசவநாயக்கன்பட்டி - வட்டமலை குழாய்த் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்தப் பகுதி ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.