சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திருப்பூரில் இஸ்லாமியர் போராட்டத்தால் பரபரப்பு! காரணம் என்ன?

திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளி வாசல் மூட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பேரணியாக வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் காங்கேயம் சாலை, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

Updated On :

திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளி வாசல் மூட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பேரணியாக வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அதை மூட வேண்டியும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Story image

இதையடுத்து பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் வியாழக்கிழமை காலை காவல் துறையினர் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல்  வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலுக்குள் இருந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள். 

Story image

காவல் துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்க முயன்றார்கள். இதற்குள்ளாக, இந்த தகவல் பரவி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தப்  பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள். 

Story image

மேகும், மறியலில் ஈடுபட்டார்கள். மறியலுக்கு பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் பழைய பேருந்து நிலையம் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக வந்தார்கள்.

Story image

மாநகராட்சி சிக்னலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பள்ளிவாசல் மூடப்படுவதை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.