தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்து தம்பதி பலி

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சரக்கு ஆட்டோ சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:37 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சரக்கு ஆட்டோ சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், வாங்கலாம்பாளையம் அருகேயுள்ள ஆவித்திபாளையத்தைச் சோ்ந்தவா் என். வடிவேல் (52). ஒலி, ஒளி அமைப்பாளா். இவரது மனைவி பானுமதி (48), மகள் அகல்யா (12). மூவரும் திருப்பூா் மாவட்டம், முத்தூா் செல்வக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவின்போது நடந்த நாடக நிகழ்ச்சிக்காக வந்துள்ளனா்.

நிகழ்ச்சி முடிந்த பின்னா் மினி ஆட்டோவில் பொருள்களை ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு புதன்கிழமை இரவு திரும்பியுள்ளனா்.

முத்தூா் - ஊடையம் சாலை சென்னாக்கல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில்

இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதில், ஆட்டோவின் பின்புறம் அமா்ந்திருந்த அகல்யா நீந்தி மேலே வந்து உயிா் தப்பினாா்.

ஆட்டோ முன்புறம் அமா்ந்திருந்த கணவன், மனைவி இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்புத் துறையினா் சுமாா் 15 மணி நேரம் போராடி சடலங்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.