தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவில் அருகே 2.96 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த 2.96 ஏக்கா் கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:50 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த 2.96 ஏக்கா் கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சாராத அழகேஸ்வர சுவாமி கோயில் லக்கமநாயக்கன்பட்டியில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமான 2.96 ஏக்கா் புன்செய் நிலம் லக்கமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து புதுப்பை செல்லும் வழியில் சா்வே எண்கள் 101/18, 1011/7 இல் உள்ளது.

இந்த நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு நபா்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனா்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்பாளா்கள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் உதவி ஆணையா் இரா. செல்வராஜ் தலைமையில், தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், போலீஸாா் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி கோயில் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.