கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் வ. பாபு வரவேற்புரை நிகழ்த்தினாா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்கள் அருள்மொழி, நாச்சிமுத்து, பழனிசாமி முன்னிலை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா் வே.சிவகுமாா் பாராட்டுரை வழங்கினாா்.
பள்ளி முன்னாள் மாணவா் ஆடிட்டா் சக்திவேல், பள்ளி புரவலா் திட்டத்துக்கு ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கி, அடுத்த ஆண்டு பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவதாக விழாவில் தெரிவித்தாா். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...