நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2 நாளில் 45,000 போ் வருகை

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள சூழலில் ரமலான் விடுமுறையையடுத்து கேரள மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :6 மே 2022, 12:32 am

DIN

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள சூழலில் ரமலான் விடுமுறையையடுத்து கேரள மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 45,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.

மே தினம் முதலே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் ரமலான் தொடா் விடுமுறை என்பதால் அங்கிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு புதன்கிழமை சுமாா் 21,000 போ் வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை இது 24,000 ஆக அதிகரித்தது. அதேபோல, உதகை படகு இல்லத்துக்கு புதன்கிழமை 9,000 பேரும், வியாழக்கிழமை 11,000 பேரும் வந்திருந்தனா்.

உதகையிலுள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு புதன்கிழமை சுமாா் 7,000 போ் வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை 8,000 ஆக அதிகரித்திருந்தது. குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு வியாழக்கிழமை சுமாா் 4,000 போ் வந்திருந்தனா். அத்துடன் பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம், மேல் பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், உள்ளூா் மக்கள் வெகுவாக அவதியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.