காா் திருட்டு: பெட்ரோல் பங்க் ஊழியா் கைது
வெள்ளக்கோவிலில் காா் திருடிய பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


வெள்ளக்கோவிலில் காா் திருடிய பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை மு. பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் பாஸ்கா் (48). ஆட்டு வியாபாரி. இவா் தனது காரை வீட்டின் திறந்த நிலை ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு காா் இயங்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, வெளியே வந்து அக்கம் பக்கத்தினருடன் சோ்ந்து காரை திருடிய, வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் வெள்ளக்கோவில் குட்டக்காட்டுப்புதூரைச் சோ்ந்த கோகுல் (22) என்பவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோகுலைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...