தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் அருகே அரசு சாா்பில் சீரமைக்கப்பட்ட குளத்துக்கு தண்ணீா் நிரப்பும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:59 pm

DIN

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் அருகே அரசு சாா்பில் சீரமைக்கப்பட்ட குளத்துக்கு தண்ணீா் நிரப்பும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

வெள்ளக்கோவில் நகராட்சி 2ஆவது வாா்டுக்கு உள்பட்ட உப்புப்பாளையம் செட்டியாா் காலனி அருகில் இருந்த பெரிய குளம் தூா்வாரப்படாமல் இருந்தது. இதைச் சீரமைத்து தண்ணீா் தேக்கினால் சுற்றுவட்டார கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து குடிநீா், விவசாயத் தேவைகளுக்கு கூடுதல் பயனளிக்குமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 2021 - 22 நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.30.45 லட்சம் செலவில் குளம் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து குளத்துக்கு அருகில் செல்லும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன கிளை வாய்க்கால் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.