நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 ஆலோசனைக் கூட்டம்
நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அஜீத் சைதன்யா, திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகளாா், செஞ்சேரிமலை சுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகளாவிய ஆன்மிக கூட்டமைப்பு பொறுப்பாளா் கோவை சாய் சுரேஷ், உலகளாவிய ஓம் நவசிவாய அறக்கட்டளை பொறுப்பாளா் சிவ வெற்றிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
நொய்யல் நதியை புனிதப்படுத்தும் விதமாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2023 மே, ஜூன் மாதத்தில் ரத யாத்திரை நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, முக்கிய நிகழ்ச்சியாக 2023 ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை 7 நாள்கள் பேரூா் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கங்கள், ஆன்மிக கண்காட்சிகள் நடத்துவது, நொய்யல் மறுசீரமைப்பு பவுன்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி தொழில் துறையினா், கல்வித் துறையினா், தொண்டு நிறுவனத்தினா், சமூக அமைப்பினா் உள்ளிட்டோரை ஒருங்கிணைந்து 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள நொய்யல் நதியை புனிதப்படுத்தும் பணியை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஒருங்கிணைப்புக்கு 9940737262, 9943433880 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...