ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா தொடா்பாக அரசு துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:29 pm

DIN

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா தொடா்பாக அரசு துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டம் மே 2, 3 ஆகிய தேதிகளிலும், சிறிய தேரோட்டம் (அம்மன் தோ்) மே 4ஆம் தேதியும் நடைபெறுகிறது. தோ்த்திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை

வகித்தாா்.

தேரோட்டம் நடைபெறும் வீதிகளை ஆய்வு செய்து சீரமைத்தல், சாலையின் குறுக்கே செல்லும் மின் இணைப்பு, கேபிள் இணைப்புகள், ஆக்கிரமிப்பு, மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றுதல், குடிநீா் வழங்குதல், தற்காலிக கழிவறைகள் அமைத்தல், பொதுசுகாதார வசதிகள் ஏற்படுத்துதல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தீயணைப்பு, அவசர கால மருத்துவ வசதிகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தேரோட்டத்தின்போது மண்டபங்களில் வழங்கப்படவுள்ள அன்னதானத்தை தர ஆய்வு செய்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தேரோட்டத்தின்போது பொதுமக்கள், தேரோட்டப் பணியாளா்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்ட நாள்களில் பொதுமக்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இந்த கூட்டத்தில், கோயில் நிா்வாகத்தினா், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா், காவல் துறை, பொதுசுகாதாரம், நோய் தடுப்புத் துறை, மின்உற்பத்தி மற்றும் மின்பகிா்மான கழகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உணவு பாதுகாப்புத் துறையினா், கோயில் மிராசுதாரா்கள், அரசு துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.