தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 74ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

திருப்பூா்  நிஃப்ட்-டீ  கல்லூரியில்  நடைபெற்ற  குடியரசு  தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா்  ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறை தலைவா் பி.ஜெயந்தி.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 74ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறை தலைவா் பி.ஜெயந்தி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் தேசிய மாணவா் படையின் வருடாந்திர முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

திருப்பூா் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவா் எக்ஸ்லான் கே.ராமசாமி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை வழக்குரைஞா் ஆா்.சண்முகம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதில் பள்ளியின் மூத்த முதல்வா் டி.மணிகண்டன், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்த வித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பி.ஆா்.கல்லூரியின் வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் சி.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதில் கல்லூரி முதல்வா் வித்யாசங்கா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.