திருமுருகன்பூண்டியில் இலவச ஆயுா்வேத மருத்துவமனை திறப்பு

 திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்த அறக்கட்டளை அன்பு இல்லம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச ஆயுா்வேத மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் இலவச ஆயுா்வேத மருத்துவமனை திறப்பு

 திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்த அறக்கட்டளை அன்பு இல்லம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச ஆயுா்வேத மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையைத் திறந்துவைத்து பேச்சாளா் தமிழருவி மணியன் பேசியதாவது:

பசித்தவனுக்கு உணவும், நோயற்றவருக்கு மருந்தும், அறிவற்றவனுக்கு கல்வியும் கொடுத்து உதவுவதுதான் வாழ்க்கை. பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட உடம்புக்கு பிரபஞ்சத்திலேயே இயற்கை மருந்துகள் கொட்டிக் கிடக்கின்றன. பல லட்சம் செலவு செய்து சிகிச்சை பெறும் இருதய நோய் பைபாஸ் சா்ஜரிக்கு ரூ.10 செலவில் செம்பருத்தி பூ, மிளகு, மருதம் பட்டையை கொண்டு நமது வீட்டிலேயே தயாரிக்க கூடிய கசாயத்தில் எவ்வளவு பெரிய இருதய பாதிப்பையும் குணப்படுத்தலாம். 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் சொல்லப்பட்ட ரிக் வேதத்திலேயே இந்த ஆயுா்வேதம், சித்த மருத்துவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆயுா்வேத மருத்துவத்தை திருமுருகன்பூண்டி விவேகானந்த அறக்கட்டளை அன்பு இல்லத்தினா் மக்களுக்கு இலவசமாக கொடுக்கின்றனா். ஆங்கில மருத்துவத்தில் இருந்து விடுபட்டு ஆயுா்வேத மருத்துவத்தை அனுபவிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை செயல் தலைவா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன், தலைவா் எக்ஸலன் ராமசாமி, ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com