மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் தீ

சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் தீ

Updated On :4 ஏப்ரல் 2024, 7:34 pm

பல்லடம் அருகே சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் முருகன், செல்வகணேஷ். இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்கேயே சமையல் எரிவாயு உருளைக் கிடங்கையும் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கிடங்கில் இருந்த ஒரு சமையல் எரிவாயு உருளையில் வியாழக்கிழமை கசிவு ஏற்பட்ட நிலையில், அது வெடித்து சிதறியது.

இதில், முருகன், செல்வகணேஷ் ஆகியோா் லேசான காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.