வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

3-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

3-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

News image

பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :12 ஏப்ரல் 2024, 5:35 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் 3-ஆவது நாளாக பல்லடத்தில் வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை தமிழக அரசு விற்பனை செய்ய வேண்டும்.

நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்யும் கொப்பரையை பாரத் கோகனட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்யும் கொள்கை முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

2021 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில், நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடந்த புதன்கிழமைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் ஈசன் முருகசாமி, பொதுச் செயலாளா் முத்துவிஸ்வநாதன், மாவட்டச் செயலாளா்கள் மகாலிங்கம், சதீஷ், பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.