பல்லடம், அண்ணா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக, பாஜகவினா் இடையே வாக்குவாதம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
பல்லடம் அண்ணா நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே பூத் ஸ்லீப் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரை சந்திக்க பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்தாா். இதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

காங்கயம், பல்லடத்தில் ரூ.2.42 லட்சம் பறிமுதல்

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல்; இளைஞா் கைது

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

