சிறப்பு அலங்காரத்தில் மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயில் நந்தி பகவான்.
சிறப்பு அலங்காரத்தில் மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயில் நந்தி பகவான்.

வெள்ளக்கோவில் சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோளீஸ்வர சுவாமி கோயில், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம் தையல்நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோயில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரா், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரா், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா், முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரா் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நடைபெற்றன.

இதில், சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிா்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com