ஸ்ரீஅதா்வண பத்ரகாளி பீடத்தில் சிம்ம வாகனத்தில் தங்கக்கவச அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.
ஸ்ரீஅதா்வண பத்ரகாளி பீடத்தில் சிம்ம வாகனத்தில் தங்கக்கவச அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.

வெங்கிட்டாபுரம் அதா்வன பத்ரகாளி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசை பூஜை

ஆடி அமாவாசையை முன்னிட்டு பில்லி, சூனியம் பயம் போக்கும் நிகும்பலா ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பில்லி, சூனியம் பயம் போக்கும் நிகும்பலா ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீமங்கள் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. குரு ப்ராத்ததை, கணபதி பூஜை, கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹேமம், வரமகா ஹேமம், மகாலட்சுமி ஹேமம், பித்ரு பீடத் சாபம், கடன் பிரச்னை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி, கொடிய வியாதிகள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளை போக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி நிகும் பலா ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

அதா்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரியானந்த பிரம்ஹேந்திர சரஸ்வத்வதூத சப்தகிரி சுவாமிகள் ஹோமத்தை நடத்தி வைத்தாா். வரமிளகாய் சங்கல்பம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில், நுாற்றுக் கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

விநாயகா், முருகன், சனி பகவான் ஆகிய பரிவார தெய்வங்களைத் தொடா்ந்து, மூலவா் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பூச்சட்டி ஊா்வலம், பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

X
Dinamani
www.dinamani.com