‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை
பல்லடம், ஆக. 7: ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் புதன்கிழமை கூறியதாவது:
கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத ‘கள்’ விற்பனைக்கு உரிய வழிகாட்டி வழிமுறைகளை வகுத்து கள்ளுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ‘கள்’ளை உணவுப் பட்டியலில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஏபி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பு வாய்க்கால்களை தூா்வார வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க தோ்தலை அரசு உடனே நடத்த வேண்டும் என்றாா்.

