விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தம்பதி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
விபத்தில் உயிரிழந்த சிவகுமாா், லதா .
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தம்பதி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சிவகுமாா் (50), பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42). இவா்களுக்கு மகன்கள் கோகுலகிருஷ்ணன் (22), தீபன்குமாா்(19) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் சிவகுமாா், லதா ஆகியோா் ஊத்துக்குளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே புதுப்பாளையம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசி வேலாயுதம்பாளையம் அருகே புறவழிச் சாலையில் சென்றபோது, அதே திசையில் கோவை நோக்கி பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா், லதா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரசன் மகன் மாறன் வேம்பா் தமிழ் (34) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.