இன்றைய மின்தடை: வடுகபட்டி

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Published on

தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் டி.கோபால்சாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளபெருக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு, பி.ராமபட்டணம்.

X
Dinamani
www.dinamani.com