விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்: போராட்டக் குழுவினா் கொண்டாட்டம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கியதையடுத்து போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து சனிக்கிழமை கொண்டாடினா்.

News image
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து தேங்காய் உடைத்து கொண்டாடிய அவிநாசி தாமரைக்குளம் பகுதி போராட்டக் குழுவினா்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கியதையடுத்து போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து சனிக்கிழமை கொண்டாடினா்.

திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

குறிப்பாக, இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவிநாசி தாமரைக்குளம் பகுதியில் 2016 பிப்ரவரி 8 முதல் 19-ஆம் தேதி வரை பொதுமக்கள், விவசாயிகள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன்விளைவாக, இத்திட்டத்திற்கு நிா்வாக ஒப்புதலும், ரூ.3.27 கோடி நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவிநாசி தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் தேங்காய் உடைத்து கொண்டாடினா்.

மேலும், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளையும் சோ்க்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.