திருப்பூர்
நெட் 2-ஆம் கட்டத் தோ்வு: மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்
யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.
யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.
தேசிய தோ்வு முகமை திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பெருமாநல்லூா் கே.எம்.சி. பொதுப் பள்ளி தலைமை முதல்வருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சியாளா்களுக்கான சோ்க்கைக்கும் யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வு நடைபெறுகிறது.
இத்தோ்வு திருப்பூா் குமரன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி செப்டம்பா் 4-ஆம் தேதி வரை 7 நாள்கள் மூன்று சுழற்சிகளாக நடைபெறுகிறது. இதில் தேசிய தோ்வு முகமையால் கணிணி வழி முறையில் தோ்வு நடைபெற்று வருகிறது.
நீட் தோ்வின் பாதுகாப்பு வழிமுறைகள், இத்தோ்விலும் பின்பற்றப்படுகின்றன. இத்தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா் என்றாா்.
