மூலனூரில் ரூ. 13 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 13 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 13 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 66 விவசாயிகள் தங்களுடைய 514 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 193 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 5 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,350 முதல் ரூ. 7,921 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300. கடந்த வார சராசரி விலை ரூ. 7,500.
விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...