வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன
திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன.


திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வரி விதிப்பு குறைதீா் முகாமில் 59 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பூா் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வரி விதிப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில், மண்டலம் 1-இல் 21 மனுக்களும், மண்டலம் 2-இல் 11 மனுக்களும், மண்டலம் 3-இல் 21 மனுக்களும், மண்டலம் 4-இல் 6 மனுக்கள் என மொத்தம் 59 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு 3 நாள்களில் தீா்வு காணப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில், மாநகராட்சி துணை ஆணையா் சுல்தானா, தலைமைப் பொறியாளா் (பொறுப்பு) செல்வநாயகம், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...