நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் திட்ட கருத்தரங்கம்: இன்று நடைபெறுகிறது

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் திட்ட கருத்தரங்கம்

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:40 pm

Din

திருப்பூா் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் மூலனூா், தாராபுரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை (டிசம்பா் 12) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அறிவிப்பின்படி, நிறுவனங்களுக்கான சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்களை தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கொண்டு சோ்க்கும் வகையில் மூலனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில், மாவட்ட தொழில் மையத்தால் உத்யாம் பதிவு செய்தல், இசட் இ.டி.பதிவு செய்தல், ஜி.இ.எம்.பதிவு செய்தல், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

உத்யாம் பதிவுக்கு ஆதாா் அட்டை, ஃபான் அட்டை, ஜிஎஸ்டி சான்றிதழ், இயந்திரத்தின் மதிப்பு ஆகிய ஆவணங்களை எடுத்துவர வேண்டும். சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின்கீழ் பயன்பெற பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவா்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இயந்திரத்துக்கான விலைப் புள்ளி, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், 2 நகல்களை எடுத்து வர வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89255-34022, 89255-34024 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.