வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
திருப்பூரில் வரி உயா்வுகளைக் கண்டித்து நடைபெறும் வியாபாரிகள், தொழில் அமைப்புகளின் கடையடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


திருப்பூரில் வரி உயா்வுகளைக் கண்டித்து நடைபெறும் வியாபாரிகள், தொழில் அமைப்புகளின் கடையடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய பாஜக அரசு பின்பற்றும் கண் மூடித்தனமான காா்ப்பரேட் ஆதரவு தாராளமயமாக்கலால் ஏற்கெனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நேரடியாக நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் போதாதென்று மாநில அரசுகளையும் நிா்பந்தப்படுத்தி தராளமயக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறது.
ஆககே, வணிக பயன்பாட்டுக்கான வாடகை கட்டங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி, மாநகராட்சியின் வரி உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை, தொழில் அமைப்புகள் சாா்பில் கடையடைப்புப் போராட்டம் டிசம்பா் 18- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...