கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி காயம்
முத்தூா் அருகே கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.

Updated On :12 டிசம்பர் 2024, 9:33 pm

முத்தூா் அருகே கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.
மங்கலப்பட்டி அருகேயுள்ள சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (64), கூலித் தொழிலாளி. இவா் முத்தூா் - காங்கயம் சாலையில் மிதிவண்டியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த கிரேன் மோதியதில் பழனிச்சாமி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவா் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கிரேன் ஓட்டுநா் மாதவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...