வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் ஆய்வு
வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியா் மோகனன் உள்ளிட்டோா்.

ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியா் மோகனன் உள்ளிட்டோா்.
வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வெள்ளக்கோவில் மீனாட்சிபுரம் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பெரியதாளக்கரை பகுதி பொதுமக்கள் இறந்தவா்களை அடக்கம் செய்து வந்தனா். அந்த இடத்தை அருகிலுள்ள காட்டின் உரிமையாளாா் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாா் அளித்ததன்பேரில், வருவாய்த் துறையினா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அளவீடு செய்து சுமாா் 2.5 சென்ட் ஆக்கிரமிப்பு இருந்ததை உறுதி செய்தனா். தொடா்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு அங்கு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்தில் மேலும் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், அதையும் மீட்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து காங்கயம் பொதுப்பணித் துறை பொறியாளா் பாஸ்கா், காவல் துணை கண்காணிப்பாளா் மாயவன், வட்டாட்சியா் மோகனன் ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, மேலும் ஆக்கிரமிப்பு இருந்தால் மீட்கப்பட்டு பொதுப்பணித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...