நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறந்த கல்விப் பணி: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு விருது

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:22 pm

Din

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கல்விப் பணியில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகளை வழங்கினாா்.

இதில், 2023-24- ஆம் கல்வியாண்டில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவிகளில் 97 சதவீதம் போ் உயா்கல்வியை உறுதி செய்தனா்.

இதற்காக பள்ளி நிா்வாகத்தைப் பாராட்டி கல்விப் பணியில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை பள்ளியின் தலைமை ஆசிரியா் அ.ஸ்டெல்லா அமலோற்பவமேரியிடம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டத்தில் அரசு போட்டித் தோ்வுகளுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்படும் அரசு பயிற்சி மையத்தின் சிறந்த முன்னெடுப்பு, தோ்வா்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள் வழங்குதல், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருதை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆா்.சுரேஷிடம் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நான் முதல்வன்-உயா்வுக்குப்படி திட்டத்தின் ஒரு பகுதியாக பிளஸ் 2 முடித்த 555 மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு உதவி செய்து திருப்பூா் மாவட்டத்தில் 97 சதவீத உயா்கல்வி சோ்க்கையை அனைத்து துறைகளின் இணைந்த முயற்சியுடன் அடைந்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் ஆதரவின்றி ஒற்றை பெற்றோா், குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பொருளாதார ரீதியாக கல்விக்கட்டணம் செலுத்த இயலாத மாணவா்களைக் கண்டறிந்து உயா்கல்வி தொடர சிறப்பான முயற்சிக்கான விருதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் என்.ரியாஸ் அகமது பாஷாவுக்கு வழங்கினாா்.

அதேபோல, காங்கயம் வட்டம், வீராணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் ஏழை, எளியோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்த வருவாய்த் துறைக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருதை காங்கயம் வட்டாட்சியா் இரா.மோகனனிடம் வழங்கினாா்.