நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூலனூரில் ரூ. 15.85 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 15.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:12 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 15.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80 விவசாயிகள் 617 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 220 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 8 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ. 7,979 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,400. கடந்த வார சராசரி விலை ரூ. 7,300.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.