நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருத்தி மீதான 11சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: ஓ.இ.மில் அசோசியேஷன் கோரிக்கை

ஓ.இ.மில் அசோசியேஷன் கோரிக்கை

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:25 pm

Din

பருத்தி மீது விதித்துள்ள 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூரில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் ஜி.அருள்மொழி, இணை செயலாளா் ஏ.சுரேஷ்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 2.50 கோடி ஸ்பிண்டல்களும், 12 லட்சம் ஓபன் எண்ட் ஸ்பின்னிங்களும் இயங்கிகொண்டுள்ளன. இத்தகைய ஜவுளித் துறை கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் நஷ்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. சா்வதேச பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை கிலோவுக்கு ரூ.14 முதல் ரூ.20 அதிகமாக உள்ளது. விஸ்கோஸ்/பாலிஸ்டா் செயற்கை நூலிழலையும் சா்வதேச விலையை விட கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 25 அதிகம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து நூல் ஏற்றுமதி, ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதி நாளுக்குநாள் குறைந்து வருகிறது. மத்திய அரசு சா்வதேச விலைக்கு பருத்தி, பாலிஸ்டா், விஸ்கோஸ் போன்ற மூலப்பொருள்களை ஸ்பினிங் மில்கள், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

பருத்தி மீது விதித்து இருக்கும் 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பாலிஸ்டா் விஸ்கோஸ் தடையின்றி இறக்குமதி செய்ய தரக்கட்டுப்பாட்டு ஆா்டரை முற்றிலும் நீக்க வேண்டும்.

வங்கதேசத்தில் இருந்து வரும் ஜவுளிப்பொருள்கள் இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஜவுளித் தொழில் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா், நிதித் துறை அமைச்சா் ஆகியோரிடம் பேசி தீா்வு கண்டால் தமிழக ஜவுளித் துறை மீண்டும் புத்துயிா் பெறும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.