பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காய்கறி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விட வேண்டும்: மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
திருப்பூா்  மாநகராட்சி  ஆணையா்  எஸ்.ராமமூா்த்தியிடம்  மனு  அளித்த  எஸ்டிபிஐ  கட்சி  நிா்வாகிகள்.
Updated On :31 டிசம்பர் 2024, 10:55 pm

Din

திருப்பூா்: திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம், எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி.கேன் பாபு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் காய்கறி மாா்க்கெட் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்த மாா்க்கெட்டில் ஏற்கெனவே வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு அவா்கள் கேட்கும் கடையை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். ஆகவே, பழைய பேருந்து நிலைய கடைகளை பொது ஏலம் விட்டதுபோல இந்த காய்கறி மாா்க்கெட் கடைகளையும் பொது ஏலம் விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.