/

மதுபானம் விற்றவா் கைது

மதுபானம் விற்றவா் கைது

Updated On :17 பிப்ரவரி 2024, 7:20 am IST

வெள்ளக்கோவில், பிப். 16: வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, துரைராமசாமி நகரைச் சோ்ந்த நாட்ராயன் (74) என்பவரை கைது செய்தாா். அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.