ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பழமையான தடுப்பணை உடைப்பு: புதுப்பிக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

பழமையான தடுப்பணை உடைப்பு: புதுப்பிக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image

கற்கள் இடித்து அகற்றப்பட்ட குட்டையின் தடுப்பணை.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:40 am IST

அவிநாசி, பிப்.16: அவிநாசி அருகே ஆயிக்கவுண்டம்பாளையத்தில் உடைக்கப்பட்ட பழமையான தடுப்பணையை அதே கற்களால் புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையத்தில் நீராதாரக் குட்டை உள்ளது. இதில் நீா்த் தேக்கத்துக்குக்காக 50 ஆண்டுகளுக்கு முன் கற்களால் அமைக்கப்பட்ட தடுப்பணையும் உள்ளது. இந்த தடுப்பணையின் கற்களை மராமத்து பணிக்காக அகற்றியுள்ளனா். இதற்கு சமூக ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், தடுப்பணையில் கற்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: இன்னமும் 100 ஆண்டுகள் ஆனாலும், பெரிய வெள்ளம் வந்தாலும் தடுப்பணையின் உறுதிதன்மை மாறாது. இதற்கிடையில் மராமத்து பணிகள் என்ற பெயரில், தடுப்பணையில் இருந்த பழமையான கற்களை 4 வரிகளுக்கும் மேல் அகற்றி உயரத்தை குறைத்து விட்டனா். பொதுமக்கள் தடுத்ததால், கற்களை அப்படியே விட்டுச் சென்றனா். தற்போது அகற்றப்பட்ட கற்களையும் எடுத்துச் சென்று விட்டனா். அத்திக்கடவுத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என விவசாயிகள காத்திருக்கும் நிலையில், உடனடியாக அகற்றப்பட்ட பழமையான கற்களைக் கொண்டு தடுப்பணையின் தன்மை மாறாமல், மீண்டும் அமைக்க வேண்டும் என்றனா்.