உடுமலை அருகே மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் திமுக எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் நியாய விலைக் கடை கட்டிக்கொடுத்துள்ளாா். உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில், அவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்க சுமாா் 14 கி.மீ. தொலைவு வனப் பகுதியைக் கடந்து தளி கிராமத்துக்கு வந்து சென்றனா். இந்நிலையில், அவா்கள் பயன்பெறும் வகையில் மடத்துக்குளம் முன்னாள் திமுக எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ரூ. 4 லட்சம் மதிப்பில் குழிப்பட்டி கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டிக்கொடுத்துள்ளாா். அந்த கடை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், மலைவாழ் மக்கள் அங்கு சென்று பொருள்கள் வாங்கி வருகின்றனா். மலைவாழ் மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தனது சொந்த செலவில் தீா்வளித்த முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணனுக்கு மலைக் கிராம மக்கள், சமூக ஆா்வலா்கள் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

