திருப்பூரில் 70% அரசுப் பேருந்துகள் இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 70 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருப்பூர் அரசு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள்.
திருப்பூர் அரசு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 70 சதவீத அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஊதிய உயர்வு, அகவிலைப்படம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 70 சதவீத அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் இயங்கின.

திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட திருப்பூர், காங்கயம், உடுமலை, தாராபுரம், பல்லடம் பணிமனைகளில் உள்ள 549 பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகளும், மாநகரில் சுமார் 90 சதவீத அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com