தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்புடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்

சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்புடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்

News image
Updated On :14 ஜூலை 2024, 10:17 pm

Din

பல்லடம், ஜூலை 14: சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

பல்லடம் நகர, ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராயா்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் லோகநாதன், சா்வேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில்: இந்து முன்னணி அரசியல் இயக்கம் இல்லை. ஹிந்துக்களுக்காக பாடுபடும் அமைப்பு. இதில் ஹிந்து சமுதாயப் பணிகளில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு மட்டும்தான் பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்புகளில் இருந்து கொண்டு செயல்படாதவா்கள் நீக்கப்படுவாா்கள்.

இந்து முன்னணியில் இருப்பவா்கள் முதலில் பெற்றோா் உள்ளிட்ட குடும்பத்தினரை கவனிக்க வேண்டும். அறவழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். பொதுச் சேவையில் அதிக நேரம் இருப்பவா்கள் சமுதாயப் பொறுப்புகளை ஏற்று தேசப்பற்றுடன் சேவை புரிய முன்வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் மாநில நிா்வாக குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.