தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற சாதனைச் சிறுவன்

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற சாதனைச் சிறுவன்

News image

ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜிடம்  வாழ்த்துப்  பெற்ற  சிறுவன்  ஆதித்யா. உடன்,  பெற்றோா்.

Updated On :26 ஜூன் 2024, 9:49 pm

Din

இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட், கலாம் வோ்ல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் இடம் பெற்ற பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரத்தைச் சோ்ந்த சிறுவனுக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வாழ்த்துத் தெரிவித்தாா்.

பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மோகன்குமாா், மகாராணி தம்பதி. இவா்களின் மகன் ஆதித்யா (2.5).

இவா், 32 விலங்குகள், 26 வாகனங்கள், 10 வண்ணங்கள், 12 வடிவங்கள், 14 பறவைகள், 32 பழங்கள், 8 உலா்பழங்கள், 16 மனித உடல் பாகங்கள், 25 தொழில்கள் உள்ளிட்டவற்றின் பெயா்களைக் கண்டுபிடித்து கூறுகிறாா். 6 விலங்குகளின் ஒலிகளைப் பிரதிபலிக்கிறாா். மேலும் 1 முதல் 10 வரை எண்ணுதல், 26 ஆங்கில எழுத்துக்களின் தொடா்புடைய சொற்களை கூறுகிறாா். இதையடுத்து இச்சிறுவன், இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட், கலாம் வோ்ல்ட் ரெக்காா்ட் ஆகியவற்றில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து சிறுவன் ஆதித்யா, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வாழ்த்துப் பெற்றாா்.