நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:53 pm

Din

பல்லடம், ஜூன் 26: பல்லடம் அருகே கொடுவாயில் தனியாா் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் மருததுரை மகன் திருமுருகன் (24), கட்டடத் தொழிலாளி. இவா், கொடுவாய் அருகே திருப்பூா்-தாராபுரம் சாலையை இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியதில் திருமுருகன் உயிரிழந்தாா். இது குறித்து கொடுவாய் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.