/

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 போ் கைது: 37 கிலோ கஞ்சா பறிமுதல்

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 போ் கைது 37 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On :7 மார்ச் 2024, 6:29 pm

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவிநாசி போலீஸாா் அவிநாசி-மங்கலம் சாலையில் கடந்த வாரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாலையோரம் மா்மமான முறையில் கிடந்த 4 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில் 37 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீஸாா் ரோந்துப் பணியை அறிந்து மா்ம நபா்கள் கஞ்சா மூட்டைகளை வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தப்பியோடிய நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த பியாருல் சேக் (34), சகில் முஸ்தாக் (22) மாா்கீஸ் பிபி (35) ஆகியோரை அவிநாசி போலீஸாா் கைது செய்தனா்.