பொது சுகாதாரத் துறை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

காங்கயத்தில் அரசு பொது சுகாதாரத் துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ராஜலட்சுமி தலைமை வகித்தாா். இதில், மாநிலம் முழுவதும் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றுபவா்களுக்கு கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக கூட்டமைப்பின் மாநிலத் தலைவா்கே.செந்தில் தலைமையில் பொது சுகாதாரத் துறை இயக்குநரை சந்தித்து ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காததைத் தொடா்ந்து, கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகள் எடுக்கும் முடிவுகளுக்கு திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம், சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் உள்பட 11 பொது சுகாதாரத் துறை சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com