3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மூலனூரில் ரூ.1.64 கோடிக்கு பருத்தி விற்பனை

மூலனூரில் ரூ.1.64 கோடிக்கு பருத்தி விற்பனை

News image
Updated On :3 மே 2024, 5:32 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.64 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 649 விவசாயிகள், தங்களுடைய 7,093 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்தவரத்து 2,240 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். இதில், பருத்தி விலை குவிண்டால் ரூ. 6,350 முதல் ரூ. 8,232 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.