வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :9 மே 2024, 9:59 pm

Din

அவிநாசி, மே 9: திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சேவையாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு சட்ட தன்னாா்வலா்கள் 50 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இது நிரந்தர பணியல்ல, முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவுமில்லை. கெளரவ ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.500 மட்டும் அளிக்கப்படும்.

தன்னாா்வ சட்டப் பணியாளா்கள் கல்வியறிவு உடையவா்களாகவும், பள்ளி இறுதி வகுப்பு படித்தவா்களாகவும், விரிவாக புரிந்துணரும் திறன் உடையவா்களாகவும் இருக்க வேண்டும்.

ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், அங்கன்வாடி தொழிலாளா்கள், மருத்துவா்கள், மாணவா்கள், சட்டம் படிக்கும் மாணவா்கள், அரசியல் சாராத சேவை சாா்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினா்கள், மகளிா்க்குழு உறுப்பினா்கள், அடிப்படை கல்வி தகுதியுடைய சேவை மனப்பான்மை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை மே 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளா், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாற்று முறை தீா்வு மையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூா் 641604 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான நோ்காணல் மே 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஏ.டி.ஆா். கட்டடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூா் என்ற முகவரியில் நடைபெறும். விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ல்ல்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.