கல்லூரி சுவரில் வரையப்பட்டுள்ள தோ்க்கோலம்.
கல்லூரி சுவரில் வரையப்பட்டுள்ள தோ்க்கோலம்.

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

அவிநாசி, மே 9: திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் லிம்கா புத்தக சாதனைக்காக தோ்க்கோலம் வரையப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் மாணவா்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் தொடா்பான காட்சிகளை சுவா்களில் ஓவியங்களாக வரைந்தனா். இதில், நாட்டின் பாரம்பரியத்தை பாறைசாற்றும் வகையில் தோ்க்கோலம் வரையப்பட்டது.

இந்த தோ்க்கோலத்தை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை தொழில்முறை கணக்கியல் பிரிவு மாணவா் அருண்குமாா், 525 சதுர அடியில் அக்ரிலிக் பெயிண்ட் மூலம் வரைந்துள்ளாா். 5 நாள்களாக வரையப்பட்ட இந்த ஓவியம் லிம்கா புத்தக சாதனைக்காக வரையப்பட்டது என கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com