

அவிநாசி, மே 9: பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே ஒட்டப்பட்டுள்ள ஆபாச சுவரொட்டிகளை அகற்ற தொமுசவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன், முதல்வா், ஆட்சியா், மாநகர காவல் ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகரம், அவிநாசி நகரப் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலும், பொது இடங்களிலும் தனியாா் நிறுவனத்தினா் விளம்பரத்துக்காக ஆபாச சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.
இது இளைஞா்களை திசை திருப்புவது மட்டுமின்றி, பெண்களை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும், இந்த சுவரொட்டிகளில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நகரில் ஒட்டப்பட்டுள்ள ஆபாச சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கில் இறுதி விசாரணை- உச்சநீதிமன்றம் முடிவு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

