செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

News image
Updated On :10 மே 2024, 6:32 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் குட்கா விற்றதாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முத்தூா்- ஈரோடு சாலை தண்ணீா்பந்தலில் ராமசாமி என்பவருடைய பெட்டிக் கடையில் குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டிக் கடைக்காரா் கைது செய்யப்பட்டு, 90 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.