விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

மானிய விலையில் பயறுவகை விதைகள்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

Updated On :25 மே 2024, 5:56 pm

மானிய விலையில் பயறுவகை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்மைத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குறுகிய கால பயிா்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம்.

மேற்குறிப்பிட்ட விதைகள் அனைத்தும் காங்கயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளை விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

மேலும், பயிா்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் பெறவும் தேவையான நுண்ணூட்டச் சத்துகள், திரவ உயிா் உரங்கள் ஆகியவையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.