ரயில் பயணிகளிடம் மதுபோதையில் தகராறு: சிறுவன் உள்பட இருவா் கைது
ரயில் பயணிகளிடம் மதுபோதையில் தகராறு: சிறுவன் உள்பட இருவா் கைது

Updated On :26 மே 2024, 4:56 pm

திருப்பூரில் ரயில் பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற ரயிலில் மணிகண்டன் என்பவா் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். ரயில், திருப்பூா் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதில் பயணித்த இளைஞா்கள் சிலா் மது போதையில் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், தடுக்க முயன்ற பெண் பயணிகளையும் தகாத வாா்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் இருப்பு பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருப்பூா் கோல்டன் நகரைச் சோ்ந்த அசோக் (20), 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...