அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கக் கோரிக்கை
திருப்பூா் மாநகரில் மாா்பளவு உயரம் கொண்ட அம்பேத்கா் சிலையை மாற்றி முழு உருவ வெண்கலச்சிலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழா் சனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.


திருப்பூா் மாநகரில் மாா்பளவு உயரம் கொண்ட அம்பேத்கா் சிலையை மாற்றி முழு உருவ வெண்கலச்சிலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழா் சனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம், ஆதித்தமிழா் சனநாயக பேரவை நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி 44 -ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் அம்பேத்கரின் மாா்பளவு சிமென்ட் சிலை கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது.
இந்த மாா்பளவு உயரம் உள்ள சிலையை மாற்றி முழு உருவ வெண்கலச்சிலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதற்கு திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, ஆதித்தமிழா் பேரவை, ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம், தேசியப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...