நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகரில் நாளை இலவச மருத்துவ முகாம்

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறுகிறது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:53 pm

Din

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கம் சுலோசனா மெடிக்கல் சா்வீஸ், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

வாலிபாளையம் பிரதான சாலையில் உள்ள சுலோசனா மெடிக்கஸ் சா்வீஸில் நடைபெறும் இந்த முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சா்க்கரை பரிசோதனை, சா்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை, பாதிக்கப்பட்டவா்களுக்கு எஃப்.எஃப்.ஏ., ஓ.சி.டி. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிது. கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவா்கள் முன்பதிவு செய்து கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.